--- --:--:-- --

ஆயுத பூஜை முன்னிட்டு விடுமுறை எடுக்க கூடாது..!

7

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி ஓட்டுனர்கள் நடத்துனர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என போக்குவரத்து துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆயுத பூஜை இந்த ஆண்டு வரும் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

 

சனி, ஞாயிறு வார விடுமுறையுடன் ஆயுத பூஜையும் சேர்த்து வருவதால் மூன்று நாட்கள் பெரும்பாலான நிறுவனங்களுக்கு விடுமுறை உள்ளன. விடுமுறையை பயன்படுத்தி மாநகரங்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.

 

அந்த வகையில் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது. இணையதளம் மூலம் பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். எனவே ஆயுத பூஜை நேரத்தில் ஓட்டுனர், நடத்துனர் விடுப்பு எடுக்கக் கூடாது என போக்குவரத்து துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon