--- --:--:-- --

எஸ்பிஐ வங்கியில் 54 சவரன் நகைகளை திருடிய பணிப்பெண்..!

8

ங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 54 சவரன் தங்க நகைகளை திருடிய பெண் தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்டார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எஸ்பிஐ வங்கியில் தணிக்கை செய்தபோது அதில் 24 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.

 

இது தொடர்பாக அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து செய்தபோது வங்கியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் லூர்து மேரி நூதன முறையில் நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

 

வங்கி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து நான்கு மாதங்களாக அந்த நகைகளை திருடிய தூய்மையை பணியாளரை காவலர்கள் கைது செய்தார். பின்னர் அவரை நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon