--- --:--:-- --

காரைக்கால் மாவட்டத்தில் மின்துறை அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டம்..!

4

மின் துறையில் நிலவிவரும் ஆள் பற்றாக்குறையை கண்டித்து மின்துறை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

காரைக்கால் மாவட்டம் மின் துறையை நிலவி வரும் ஊழியர்கள் பற்றாக்குறையை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வலியுறுத்தி இருநூற்றுக்கும் மேற்பட்ட மின்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் காரைக்காலில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

அப்பொழுது ஆள் பற்றாக்குறை காரணமாக பணிச்சுமை அதிகமாக உள்ளதால் மன அழுத்தம் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கும் அவர்கள் அரசின் இந்த பிரச்சினைக்கு கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் ஆட்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon