தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு.. பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்..!
புதிய மருத்துவக் கல்லூரிகளில் கல்லூரிகளை தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியீட்டு விழா அறிக்கையில் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதில் சிக்கல்கள் இருப்பதாக கடிதத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்டுப்பாடுகளின் மூலம் புதிய மருத்துவமனைகளும் புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விடும் என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டு இருக்கும் இந்த அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்கவும் இது தொடர்பாக மாநில அரசுகளோடு உரிய ஆலோசனைகளை மேற்கொள்ள தேவையான அறிவுரைகளை மத்திய சுகாதாரத் துறைக்கு வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





