இ சிகரெட் வைத்திருப்பது குற்றம் – மத்திய அரசு எச்சரிக்கை
இ சிகரெட் வைத்திருப்பது சட்டத்தை மீறும் செயல் என்று மதிய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. நாட்டில் 2019 ஆம் ஆண்டு தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலமாக இ சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனியார் இ சிகரெட் பயன்பாடு குறித்து தடை சட்டத்தில் வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால் சிலர் அதனை ஆன்லைனில் பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் எந்த வடிவத்தில் வைத்திருந்தாலும் அது தடை சட்டத்தை மீறும் செயலாகும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தனிநபர் இ சிகரெட் கேட்டு வைத்திருந்தால் சட்ட விதிகளை மீறுவதாக கருதப்படும் என்றும் இது குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு விளக்கம் அனுப்பப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





