கேரளாவில் பரவும் நிபா வைரஸ் தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்..!
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிர படுத்த சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
இரண்டு பேர் உயிரிழந்ததால் கேரள எல்லையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரியில் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவரின் முழு விவரங்களை திரட்டவும் தகவல் தெரிவிக்கவும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து வரும் அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் நிபா வைரஸ் அறிகுறி தொடர்பாக முழு ஆய்வு நடத்திய பிறகு தமிழக எல்லைக்கு அனுமதிக்க வேண்டும் என சுகாதார பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் ஆணை பிறப்பித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





