இங்கிலாந்தில் உயிரிழந்த கரூர் இளைஞரின் உடல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஏற்பாட்டில் சொந்த ஊருக்கு எடுத்துவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
குளத்துறை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான 39 வயது கனகராஜ் லண்டனில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 26 ஆம் தேதி அன்று அவர் தங்கி இருந்த வீட்டில் தடுமாறி கீழே விழுந்து தரையில் அடிபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஆதரவின்றி தவித்த குடும்பத்தினர் பாஜக மாவட்ட தலைவர் செந்தில் நாதனை அனுப்பினார். அவர் அண்ணாமலையிடம் தெரிவித்ததை தொடர்ந்து லண்டனில் உள்ள நண்பர்கள் மூலமாக நடைமுறைகளை முடித்து உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை அண்ணாமலை மேற்கொண்டார்.
உடலை கரூர் எடுத்து வருவதற்கான செலவு மற்றும் கனகராஜ் குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில் நான்கு லட்சம் ரூபாயும் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
மகனை பார்த்துவிட்டு விமானத்தில் வந்து கொண்டிருந்த தந்தை.. நடுவானில் நிகழ்ந்த சோகம்..!
நியூயார்க்கில் ஆடு மேய்க்கும் காவல் அதிகாரி..!
டிரம்ப் உயிரிழப்பு.. மகனின் எக்ஸ் தளத்தில் வந்த பதிவு..!
வெள்ளத்தில் மூழ்கி உயிருக்கு போராடிய நபர்..!
நடு வானில் பறந்த விமானம்... பயணிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு..!
மொரோக்கோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000 ஆக அதிகரிப்பு..!