நடு வானில் பறந்த விமானம்… பயணிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு..!

மனில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்த சிவகங்கை இளைஞர் நடுவானிலேயே உயிரிழந்தார். மஸ்கட்டில் வேலை பார்த்து வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான தனசேகர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஊர் திரும்பி கொண்டு இருந்தார்.

 

விமானம் சென்னை வந்தடைந்த நிலையில் தனசேகர் இருக்கையிலேயே அமர்ந்திருக்கவே அவரை விமான பணிப்பெண்கள் எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் மயங்கிய நிலையில் இருப்பது தெரிய வரவே மருத்துவ குழுவினரை வரவழைத்து பரிசோதித்த பொழுது அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது.

 

குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தனசேகரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.