மொரோக்கோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000 ஆக அதிகரிப்பு..!

மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி கடந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

வடக்கு ஆப்ரிக்க நாடான மொராக்கோவின், மராக்கேஷ் பகுதியில் இருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் அட்லஸ் மலைத்தொடர் உள்ளது. இதனை ஒட்டிய நகரங்களில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு புவியியல்துறை அதிகாரிகள் வெளியிட்ட தரவுகளின் படி ரிக்டர் அளவில் 6.8-ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.

 

பலரும் தூக்கத்தில் இருந்த போது கட்டடங்கள் குலுங்கின. இதில் ஏராளமான வீடுகள் நொடிப்பொழுதில் உடைந்து விழுந்தன. இந்த கொடூர நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

 

மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவும் வகையில் பிரத்யேக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி +212 661 129 7491 என்ற எண்ணுக்கு மொராக்கோவில் உள்ள இந்தியர்கள் அழைக்கலாம் என்று அங்குள்ள இந்திய தூதரம் தெரிவித்துள்ளது.