--- --:--:-- --

பணம் வாங்கிக்கொண்டு ஸ்கேன் ஒப்பந்தம் ரத்து.. அமைச்சர் சுப்ரமணியன் அதிரடி..!

4

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணம் வாங்கிக்கொண்டு ஸ்கேன் செய்வதாக கிருஷ்ணா டயக்னாடிக்ஸ் என்ற நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

 

இன்று ஒரே நாளில் பொதுமக்கள் ஏழு பேரிடம் இருந்து தலா 2,500 ரூபாய் வசூலித்து ஸ்கேன் செய்யப்பட்டது. ஆய்வு மூலம் கண்டறிந்த அமைச்சர் உத்தரவை பிறப்பித்தார். இதன் மூலம் அங்கு செயல்பட்டு வந்த ஸ்கேன் சென்டர் மூடப்பட்டது.

 

தேசிய நலவாழ்வு குடும்பத்தின் மூலம் ஸ்கேன் எந்திரம் வழங்கவும், அதற்குரிய பணியாளர்களை நியமிக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon