அரசு பேருந்தில் ஒழுகும் மழை நீர்..!
மதுரையில் அரசு பேருந்தில் குற்றால அருவியை போல் கொட்டிய மழை நீரில் பயணிகள் குளித்துக்கொண்டே வந்தனர். பாபநாசம் முதல் மதுரை வரை செல்லும் அந்த தெருவில் பெரும்பாலான பயணிகள் தலைக்கு மேல் குடை பிடித்து கொண்டும், மழையினை துடைத்துக் கொண்டும் பயணித்தனர்.
காசு கொடுத்து தானே பேருந்தில் வருகிறோம் நல்ல பேருந்தை விடக்கூடாதா என பயணிகள் ஆதங்கத்துடன் கூறினர். மேலும் அரசு பேருந்துகளில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





