செல்போன் திருடியதாக கூறி இளைஞரை அடித்துக் கொன்ற பக்தர்கள்..!
மயிலாடுதுறை அருகே செல்போன் திருடியதாக கூறி இளைஞர் ஒருவரை வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் தாக்கியதில் அவர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் வருடா வருடம் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் 10 நாள் திருவிழாவில் கலந்து கொள்ள தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாக செல்வார்கள்.
அந்த வகையில் கடலூர் மாவட்ட பேருந்து பாதயாத்திரை வந்த 10 இளைஞர்கள் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பவர் பேங்க்கை ஒருவர் திருட முயற்சிக்கையில் விழித்துக் கொண்ட குழுவினர் அவரை விரட்டி பிடித்து தாக்கியுள்ளனர்.
காவல்துறையிடம் அவரை ஒப்படைத்த பிறகு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாதயாத்திரை குழுவினர் ஆறு பேரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





