தனியார் உணவகத்தில் உணவில் துர்நாற்றம்..!
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் உணவகத்தில் ஆர்டர் செய்த உணவில் துர்நாற்றம் வீசியதாக புகார் தெரிவித்த வாடிக்கையாளர் முன்பே ஊழியர்கள் உணவை குப்பையில் கொட்டினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் ஹோட்டல் மேலாளரை அழைக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உணவுப் பொருட்களை செல்போனில் படம் எடுத்ததை கண்ட ஊழியர்கள் உடனடியாக உணவை வேகமாக அகற்றினார்.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





