--- --:--:-- --

சாமி ஊர்வலத்தில் ஏற்பட்ட பெரும் விபத்து..!

7

ர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெரியாண்டிச்சி கோவில் திருவிழாவில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு விஜயகுமார் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இரவு நடைபெற்ற சாமி ஊர்வலத்தில் வைக்கப்பட்ட பட்டாசு வெடித்து மினி சரக்கு வாகனத்தில் மொத்தமாக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளின் மீது விழுந்ததில் மொத்த பட்டாசுகளும் வெடித்தன.

 

இதனால் பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் படுகாயம் அடைந்த மூன்று குழந்தைகள் மற்றும் இளைஞர் ஒருவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon