மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் : ப.சிதம்பரம்
மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தொடர் வன்முறைகள் அரங்கேறி வரும் நிலையில் பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மூன்று சமூக மக்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாகவும் இதற்கு தீர்வு காண மூன்று தரப்பினரும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு பேச்சுவார்த்தைக்கு நடுநிலை வகிக்கும் நிர்வாக தேவை என்பதால் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய அவசியம் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





