--- --:--:-- --

குற்றவாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய மெய்தி இன பெண்கள்..!

4

மணிப்பூரில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியின் வீட்டை மெய்தி இனப்பெண்கள் அடித்து நொறுக்கினார். மணிப்பூரில் வெளிச்சம் போட்டு காட்டும் காணொளி வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

அதில் முக்கிய குற்றவாளியான 32 வயதான மெய்தி இனத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரது வீட்டை சொந்த கிராம மக்களே அடித்து நொறுக்கினார்.

 

அவரின் செயல் ஒட்டுமொத்த மெய்தி இன மக்களுக்கு அவமானத்தை தருவதாக கூறி அவர் வீட்டை பெண்கள் அடித்து நொறுக்கினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon