--- --:--:-- --

மணிப்பூர் கலவரம் : பிரதமருக்கும் முதலமைச்சருக்கும் டெல்லி மகளிர் ஆணையர் கடிதம்

3

மணிப்பூர் பெண்களுக்கு வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சருக்கும் டெல்லி மகளிர் ஆணையர் சுவாதி கடிதம் எழுதி இருக்கிறார்.

 

வன்கொடுமை தொடர்பான வீடியோவில் உள்ள நபர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்குமாறு சுவாதி கூறியுள்ளார். மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேசி அரசுக்கு அறிக்கை தர விரும்புவதாகவும் இதற்கு அனுமதி தருமாறு முதலமைச்சர் சுவாதி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon