மணிப்பூர் வன்முறையால் என் இதயம் நொறுங்கியது : முதல்வர்
மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறையை கண்டு இதயம் நொறுங்கியது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையை அனைவரும் இணைந்து எதிர்க்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நடவடிக்கை எடுத்து மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எங்கே போனது நமது கூட்டு மனசாட்சி எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது போன்ற வெறுப்புணர்வு மனித குலத்தின் ஆன்மாவை சிதைத்து விடும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





