--- --:--:-- --

பாஜக கூட்டணி ஆலோசனை.. இபிஎஸ் நாளை டெல்லி பயணம்..!

9

பாஜக நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன.

 

மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்த பாஜக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கீகரிக்கும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

 

இதற்காக டெல்லியில் நாளை நடக்கும் கூட்டத்திற்கு கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக சார்பில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார்.

 

இதற்காக அவர் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பின்னர் மாலையில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளும் எடப்பாடி பழனிசாமி நாளை மறுதினம் தமிழகம் திரும்ப உள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon