துப்பாக்கி முனையில் பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலன்..!
அர்ஜென்டினாவில் முன்னாள் காதலியிடம் இருந்து இளம் பெண்ணின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு கொடுக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்கா நாடான அர்ஜென்டினாவில் சாலை நடந்து சென்ற பெண்ணிடம் அவரது முன்னாள் காதலன் அச்சுறுத்தும் வகையில் நடந்துள்ளான்.
துப்பாக்கியை காண்பித்து கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் அந்த பெண் அச்சத்துடன் ஓடுகிறார். அப்பொழுது அந்த வழியாக வந்த காவல்துறையினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இந்த கண்காணிப்பு புகைப்பட காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





