--- --:--:-- --

உடல் மெலிந்து காணப்படும் அரிசிக்கொம்பன்..!

3

அரிசி கொம்பன் யானை சரியாக உணவு எடுத்துக் கொள்ளாததால், உடல் மெலிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதன்பின் யானையை களக்காடு முண்டந்துறை வனபகுதியில் உள்ள முத்துக்குழி வயல் என்ற இடத்தில் விடப்பட்டது.

 

இந்நிலையில், வழக்கமாக விரும்பி சாப்பிடும் அரிசி, கரும்பு கிடைக்காத நிலையில், வனப்பகுதியில் உள்ள உணவை முறையாக உட்கொள்ளாத காரணத்தால் அரிசிக் கொம்பன் யானை உடல் மெலிந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

ஊர் பகுதிக்குள் யானை வராத வண்ணம் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு செய்வதால் எங்கும் செல்லாமல் அங்கேயே தனியாக யானை சுற்றி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

இதனால், யானையின் சாணத்தை ஆய்வு செய்வதுடன், அதற்கு மருத்துவ சிகிச்சை வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். கடல் மட்டத்திலிருந்து 1,350 மீட்டர் மேல் உள்ள கோதை ஆற்றின் பிறப்பிடம் அருகே உள்ள வனப்பகுதியில் அரிசிக்கொம்பன் யானை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon