பிரபல நகைச்சுவை நடிகர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு..!
மலையாள நடிகர் ஹரிஷ் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 48. ஏராளமான மலையாள படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரங்களில் நடித்து வந்தவர். ஹரிஷ் கடந்த சில மாதங்களாக இவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது தந்தை கல்லீரல் தானம் கொடுக்க வந்த நிலையில் ஹரிஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கேரளா முதலமைச்சர் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





