--- --:--:-- --

சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்..!

1

சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுடன் அரசு தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், போர் நிறுத்தத்திற்கு முன்பாக இந்தியர்கள் வெளியே வருவது பாதுகாப்பானது அல்ல என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

 

வட ஆப்ரிக்க நாடான சூடானில், 2021 முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ராணுவ தளபதி அப்தெல் பத்தா அல் – புர்ஹான் மற்றும் துணை தளபதி முகமது ஹம்தான் டாக்லோ ஆகியோர் இடையே, சில நாட்களுக்கு முன் பயங்கர மோதல் வெடித்தது.

 

இதில், இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியர் ஒருவரும் இதில் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon