--- --:--:-- --

கேப்டனாக மீண்டும் விராட் கோலி..!

5

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்று வருகிறது.

 

இந்த போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக ஆர்.சி.பி அணியின் முன்னாள் கேப்டன் ‘கிங்’ கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு அணியின் கேப்டனான டு பிளேசிஸ் இன்றைய போட்டியில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்குகிறார்.

 

கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி ஆர்சிபி அணியை வழிநடத்திய கோலி 556 நாட்களுக்கு பிறகு, மீண்டும் பெங்களூரு அணியை வழிநடத்துகிறார். இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் சார்பில் மீண்டும் சாம் கரண் கேப்டனாக செயல்படுகிறார்.

 

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த போட்டியில்கூட டாஸில் தோல்வியை தழுவியதால், விராட் கோலி கேப்டனாக இருந்தால் டாஸ் வெற்றி இல்லை என அவரின் ரசிகர்களும் சமூகவலைதளங்களில் நகைச்சுவையாக பதிவிட்டு வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon