--- --:--:-- --

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தவறுதலாக தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பலி..!

6

ன்னியாகுமரி அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவனை காணவில்லை என தேடிய பொழுது பக்கத்து வீட்டு தரைத்தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டான்.

 

மீனவ கிராமத்தில் மூன்று வயது மகன் நேற்று மாலை வீட்டில் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவன் திடீரென காணாமல் போகவே பெற்றோர்களும், உறவினர்களும் தேடியுள்ளனர்.

 

இந்நிலையில் கடந்த வாரம் கிரகப்பிரவேசம் செய்யப்பட்ட பக்கத்து வீட்டின் தரைத்தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டி மூடி திறந்திருந்ததை பார்த்திருந்த அவன் சடலமாக கிடந்தான். புகாரின் பேரில் காவல்துறை விசாரணை நடத்தியதில் தரைதள தண்ணீர் தொட்டி மூடாமல் இருந்ததும் இதை அறியாமல் சிறுவன் தவறி விழுந்து இறந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon