சிஆர்பிஎஃப் தேர்வை தமிழிலும் நடத்தக்கோரி அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!
சிஆர்பிஎஃப் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் நடத்த கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கும் போதிலும் சிஆர்பிஎஃப் கணினி தேர்வு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருப்பது தமிழக இளைஞர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிஆர்பிஎப் தேர்வு இந்து மொழி பேசுபவருக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது எனவும் இது தன்னிச்சையானது மட்டும் இல்லாமல் பாகுபாடு காட்டக் கூடியது எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்தி பேசாத மாநில இளைஞர்களும் பணியாற்ற சம வாய்ப்பு பெரும் வகையில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் தேர்வை நடத்த ஏதுவாக அறிவிக்கையில் மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





