--- --:--:-- --

கரூர் அருகே வெறிநாய் கடித்து 14 பேர் படுகாயம்..!

8

கரூர் அருகே வெறிநாய் கடித்ததில் குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்த சம்பவம் அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே என்னாச்சிபுரம் லாலாபேட்டை பகுதியில் இன்று வரை சாலையில் சென்று கொண்டிருந்த போது மக்களை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது.

 

இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் பதறியடித்தபடி தங்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். காயமடைந்த சிறுமிகள் உட்பட 14 பேர் குளித்தலை அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon