திருப்பூரில் பூட்டிய வீட்டில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பூட்டி இருந்த வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி தனது குடும்பத்தினருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியூர் சென்றார்.

 

அந்த வீட்டின் ஜன்னலில் இருந்து புகை வெளியேறியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.