--- --:--:-- --

சென்னையில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!

6

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

தென்னிந்திய தீவு பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை, மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

 

வளிமண்டல கீழ அடுக்குகளில் கிழக்கு, மேற்கு திசை சந்திப்பால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon