ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் சுட்டுக்கொலை..!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழகத்தைச் சேர்ந்த முகமது சையத் அகமது என்பவரை அந்நாட்டு போலீசார் சுட்டுக் கொன்றனர். முகமது தங்களையும் தாக்க முயற்சித்ததால் அவரை துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தகவலை வெளியிட்டுள்ளனர்.
சிட்னியின் ரயில் நிலையத்தில் தூய்மை பணியாளரை கத்தியால் தாக்கியதாக கூறி முகமது மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தஞ்சை மாவட்டம் மதிராம்பட்டினத்தைச் சேர்ந்த முகமது சையத் அகமது ஆஸ்திரேலியா போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





