முதல்வர் சுற்றுப்பயணத்தை ஒட்டி புதிய பொலிவில் மதுரை..!
மதுரை மண்டலத்தில் முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் ஆட்சியர் அலுவலகம் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்திற்காக வரும் 5 மற்றும் 6 ம் தேதிகளில் மதுரை மண்டலத்தில் முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காவல்துறையினின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் வழக்கமாக மனு அளிக்கும் நாளான இன்று அலுவலகத்திற்கு வரும் பொது மக்களிடம் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வர்ணம் பூசுவதோடு குப்பைகள் அகற்றப்பட்டும் தூய்மைப்படுத்தப்பட்டும் வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





