சீனாவின் வான்பரப்பில் பறந்த மர்ம பொருள்..!
உலக வல்லரசு நாடான அமெரிக்காவின் வான் பரப்பில் ராட்சத பலூன் பறந்து இருப்பதால் சர்வதேச அளவில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் சீனாவின் மீதான சந்தேகமும் முழுமையாக அமெரிக்காவிற்கு நீங்கவில்லை என்றே தெரிகிறது.
இந்த நிலையில் தங்கள் நாட்டு வான் பரப்பில் மர்ம பொருள் பரந்ததாக சீனா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சீன செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. சீனாவில் குயின் டோபா பகுதியில் உள்ள கடல் பரப்பில் மர்ம பொருள் பறந்து சென்றுள்ளது.
இதை கவனித்து அதிகாரிகள் சுட்டு வீழ்த்துவதற்காக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா மீதான சந்தேகம் இன்னும் நீடிப்பதாக சர்வதேச பாதுகாப்பு மையம் கூறும் நிலையில் தங்கள் நாட்டு வான் பரப்பு மீது மர்ம பொருள் பறந்ததாக சீனா கூறி இருப்பது உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





