மாதவிடாய் நாட்களில் விடுப்பு வழங்கக்கோரி வழக்கு..!
மாதவிடாய் காலத்தில் மகளிருக்கு பணி விடுப்பு கோரிய பொதுநல மனு மீது வரும் பிப்ரவரி 24ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஷஹீவேந்திரா என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள மாணவிகள்.
வேலைக்கு செல்லும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சனைகளில் விடுப்பு வழங்க வேண்டும் என கேட்டிருந்தார்.
பல தனியார் நிறுவனங்கள் இத்தகைய விடுப்புகளை வழங்கி வருவதாகவும் மகப்பேறு சட்டத்தில் இதற்காக சில மாற்றங்களை செய்து அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுதாரர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் கோரிக்கை விடுத்தார். எனினும் வருகிற 24-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி அறிவித்தார்.
பிரிட்டன், சீனா, ஜப்பான், தைவான், இந்தோனேசியா, தென்கொரியா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் மாதவிடாய் கால விடுப்பு வழங்கப்பட்டு வருவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





