திடீரென நீக்கப்பட்ட பிரிட்டன் மன்னர் குழப்பத்தில் மக்கள்..!

ஸ்திரேலிய நாட்டு கரன்சிகளில் பிரிட்டன் மன்னர் உருவப்படம் இடம் பெறாது என்று அந் நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஆங்கிலேயர்களின் காலணி ஆதிக்க நாடுகளில் ஒன்றாக இருந்த ஆஸ்திரேலியாவில் பிரிட்டன் மன்னருக்கு இன்று ஆஸ்திரேலியா நாட்டின் தலைவர் என்ற அந்தஸ்தை வழங்கி வருகிறது.

 

இதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய கரன்சி டாலரில் பிரிட்டன் மன்னரின் உருவப்படம் அச்சிடப்பட்டு வந்தது. கடைசியாக பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் மறையும் வரை அவரது உருவப்படம் ஆஸ்திரேலியாவின் கரன்சி விடப்பட்டிருந்தது.

 

அவரது மறைவுக்கு பின் புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ள மூன்றாம் சார்லஸ் உருவப்படத்தை அச்சிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் கரன்சிகளில் பிரிட்டன் மன்னர் உருவப்படம் பெறாது என்று அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது.