தேனிலவுக்கு சென்ற புது மாப்பிள்ளை பரிதாப பலி..!
தேன் நிலவுக்கு சென்ற புது மாப்பிள்ளை குதிரை சவாரி செய்யும் பொழுது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் முகமது. சமீபத்தில் முகமதுவிற்கு திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து முகமது தனது மனைவியுடன் தேனிலவுக்கு சென்றுள்ளார். அவருடன் மற்றொரு தம்பதியும் சென்றுள்ளனர். தம்பதிகள் பல இடங்களில் சுற்றிப் பார்த்த நிலையில் முகமது. அவரது மனைவி மற்றும் அவர்களுடன் சென்ற மற்ற தம்பதிகள் இருவரும் குதிரை சவாரி செய்ய ஆசைப்பட்டனர்.
அப்பொழுது முகமது சென்ற குதிரை மட்டும் மிகவும் வேகமாக ஓடியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறிய முகமது பின்னோக்கி கீழே விழுந்துள்ளார். அவர் கீழ் விழுந்த தலையில் பலத்த மாயமடைந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





