உண்மையான அதிமுக யார் என்பது விரைவில் தெரியவரும் – முன்னாள் அமைச்சர் சவால்

டைத்தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிடுவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தொண்டர்களும் மக்களும் யார் பக்கம் என்பதை இனி தேர்தலில் மோதிப் பார்க்கலாம் என்று சவால் விடுத்துள்ளார்.

 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக 95 சதவீதம் கட்டுக்கோப்பாக இருப்பதாக தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியினர் போட்டியிடுவதற்கு அவர் வரவேற்பு அளித்துள்ளார்.

 

அப்போது தன் கட்சித் தொண்டர்களும் மக்களும் யார் பக்கம் உள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஈரோடு இடைத்தேர்தலுக்கு பிறகு உண்மையான அதிமுக யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.