--- --:--:-- --

சொர்க்கவாசல் திறப்பு பக்தர்கள் வழிபாடு..!

14

ஏகாதேசியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. பழனி லக்குமி நாராயணப் பெருமாள் கோவில் வரதராஜ பெருமாள் கோவில் அதிகாலை சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டது.

 

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பரிமள ரங்கநாதர் கோவிலில் ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆதிகேசவபெருமாள் கோவில், நாமக்கல் மாவட்டம் கோவிலான அரங்கநாதர் கோவில். திருவள்ளூர் மாவட்டம் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் உள்ளிட்ட வைணவ கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon