--- --:--:-- --

டிசம்பர் 20ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்பு..!

1

தமிழகத்தின் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் அதன் பிறகு கனமழை தொடரும் என தெரிவித்துள்ளது.

 

மாண்டஸ் புயலுக்கு பிறகு பெரும்பாலான மாவட்டங்களில் பகலில் வெயிலும் இரவில் கடும் பனியும் நிலவுகிறது. இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் .19ஆம் தேதியன்று தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

20ம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon