--- --:--:-- --

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு..!

16

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரும் 18ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் 30 சென்டிமீட்டர் மழை பொழியும். திருவாரூர் மாவட்டம் வேதா மங்கலத்தில் 16 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

 

மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் அந்தமானை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு இன்றும், நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon