--- --:--:-- --

27 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..!

1

கனமழை மற்றும் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு வெள்ளிக் கிழமையான இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர் ,மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தர்மபுரி, திருவண்ணாமலை, நாகை, திருச்சி, திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, கரூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கொடைக்கானல் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைப்போல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சனிக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon