தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று பிற்பகல் 12.45 மணிக்கு ஆளுநர்ஆர் என் ரவியை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு விட்டதாக அதிமுக இடைக்கால பொது செயலாளர், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி வருகிறார். முதலமைச்சராக மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்து பேசுவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியிடம் மூத்த நிர்வாகிகளும் ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
ஏடிஎம் ஷட்டரில் பாய்ந்த ஷாக்..!
கால் இல்லாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!
காதலிக்க மறுப்பு தெரிவித்த பெண்ணை தர தரவென இழுத்துச் சென்று கத்தியால் குத்திய இளைஞர்..!
நானும் இறந்து விட்டேன் என விஜய் ஆண்டனியின் உருக்கமான வார்த்தைகள்..!
23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி..!
சந்திரபாபு நாயுடு கைதுக்கு கண்டனம்..!