காதலி பேசவில்லை எனக்கூறி கழுத்தை அறுத்துக் கொண்ட மாணவன்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த 12 ஆம் வகுப்பு எட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவர் காதலி பேசவில்லை என்பதால் கழுத்தை அறுத்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த மாணவர் காதலி பேசவில்லை எனக் கூறி பள்ளி வளாகத்திலேயே தனது கையில் வைத்திருந்த பிளேடால் கழுத்து, கை, வயிறு என அறுத்துக் கொண்டார். ரத்த காயமடைந்தவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.