கொலை செய்து விடுவேன் என மனைவி மிரட்டுவதாக கூறிய கணவர்..!
உண்மைக்கு புறம்பான செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கன்னியாகுமரி மாவட்ட டி எஸ் பி தங்கராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆழ்வார் கோவில் பகுதியை சேர்ந்த வடிவேல் முருகன் மருத்துவமனையில் இருந்தபடியே வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
அதில் திருமணமாகி இரண்டு மாதங்களான நிலையில் மனைவி தனக்கு விஷம் கொடுத்து கொல்ல முடிவு செய்துள்ளதாக பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் வடிவேலு முருகன் அவரது மனைவியும் மாறி மாறி புகார் அளித்து வருவதாகவும் உண்மையை கண்டறிய விசாரணை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உண்மைக்கு புறம்பான செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





