சாலைக்கு வந்த குழந்தையை மீட்ட டாக்டர்..!
சென்னை அடுத்த பூந்தமல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சாலை வந்த குழந்தையை டாக்டர் ஒருவர் போலீசாரிடம் பத்திரமாக ஒப்படைத்தார். வேலூர் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் நந்தகுமார் என்பவர் நேற்று இரவு பைபாஸில் சென்ற பொழுது 2 1/2 வயதுடைய சிறுவன் ஒருவன் அழுதபடி சாலையில் இருப்பதை பார்த்து சந்தேகம் கொண்டு அவனை பத்திரமாக பூந்தமல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த சிறுவன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அஜித் பாஷாவின் மகன் என தெரிய வந்தது. மேலும் அந்த சிறுவன் லிப்டில் இருந்து தானாக கீழே இறங்கி காவலாளிகளையும் மீறி வெளியே சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பெற்றோரை அழைத்து அறிவுரை கூறி குழந்தையை ஒப்படைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





