--- --:--:-- --

மாற்றுத்திறனாளிகள் சிறார் பள்ளியை பார்வையிட மறுத்த திமுக சட்டமன்ற உறுப்பினர்..!

6

தேனி மாவட்டத்தில் மழைநீர் புகுந்து பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகள் சிறார் பள்ளியை பார்வையிட மறுத்த திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

தேனி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் மற்றும் தேனிநகர சபை தலைவர் ஆகியோர் அந்த பகுதியில் ஆய்வுக்காக சென்றனர். அப்பொழுது சுத்தமான பகுதிகளை மட்டும் பார்வையிட்ட அவர்கள் அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

 

முன்னதாக மழை நீர் புகுந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியை பார்வையிட அந்த பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்துக் கொண்டனர். ஆனால் அதை இன்னொரு நாள் பார்ப்பதாக கூறி அங்கிருந்து சென்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon