இரட்டைக் குழந்தை பிறந்ததில் ஒரு குழந்தை உயிரிழப்பு..!
உசிலம்பட்டி அருகே மூச்சுத் திணறல் ஏற்பட்ட பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிவராஜாவின் மனைவி கருப்பாய்க்கு கடந்த 80 நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்தன.
இந்நிலையில் பெண் குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்ஸ் உதவி உடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
தகவல் அறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





