நடிகை பூர்ணாவிற்கு திருமணம் முடிந்தது..!
பரத் நடிப்பில் வெளிவந்த முயாண்டி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இதன்பின் தமிழில் வெளியான துரோகி, ஆடு புலி, கொடிவீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை பூர்ணாவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தன்னுடைய திருமண புகைப்படங்களை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
நடிகை பூர்ணாவின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




