--- --:--:-- --

காதலி பேச மறுத்ததால் அவரின் வீட்டின் முன்பாக இளைஞர் தீக்குளித்து தற்கொலை..!

10

காதலி பேச மறுத்ததால் அவரின் வீட்டின் முன்பாக இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபக் குமார். மெக்கானிக் ஆக பணிபுரிந்து வந்த இவர் தன் சொந்த ஊரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார்.

 

இந்த நிலையில் தனது தந்தை தனது திருமணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்த அவர் தனது காதலை பற்றி தெரிவித்துள்ளார். பின்னர் காதலியை சந்திக்கச் சென்றுள்ளார். அப்பொழுது அவர் காதலை ஏற்க மறுத்த காதலி பேச்சை நிறுத்துமாறு கூறியிருக்கிறார்.

 

இதனால் மனமுடைந்த அவர் தனது காதலியின் வீட்டின் முன்பாக தன் மீது மண்எண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon