--- --:--:-- --

காதலனுடன் சென்ற சிறுமி பாறை குழியில் விழுந்து பலி..!

9

திருப்பூரில் புன்னகை மன்னன் பட பாணியில் காதல் ஜோடி இறந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை சேர்ந்த அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு பள்ளியில் படிக்கும் மாணவனுடன் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வர இருவருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டு அரசு மகளிர் விடுதியில் தங்கவைக்கப்பட்ட மாணவி அங்கிருந்து பள்ளி முடிந்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார். அங்கிருந்து கடந்த 12ஆம் தேதி மாணவி பள்ளிக்கும் செல்லாமல் விடுதிக்குத் திரும்பவில்லை என கூறப்படுகிறது.

 

இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடிவந்தனர். இந்நிலையில் சிறுமியை காதலித்த சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தன்னுடன் வந்த சிறுமி குழியில் விழுந்து இறந்து விட்டதாக கூறி உள்ளார். வந்த போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon