திருப்பூர் வடக்கு குறுமைய அளவிலான போட்டி: குழு மற்றும் தடகள போட்டிகளில் ஜெய்வாபாய் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை

திருப்பூர் வடக்கு குறுமைய அளவிலான போட்டிகளில் தடகள போட்டிகளை பூண்டி ஏ.வி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், குழு போட்டிகளை காந்தி நகர் ஏ.வி.பி மெட்ரிக் பள்ளிகளிலும் ஏ.வி.பி கல்வி குழுமங்கள் முன்னின்று நடத்தியது.

 

திருப்பூர் வடக்கு குறு மைய அளவிலான போட்டியில் குழு போட்டி மற்றும் தடகள போட்டிகள் இரண்டிலும் ஜெய்வாபாய் மாதிரி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் குழுவினர் குழு போட்டிகளில் 165 புள்ளிகளும், தடகளப் போட்டிகளில் 155 புள்ளிகள் எடுத்து தனித்தனியாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.

 

தடகள போட்டிகளில் தனி திறமையை வெளிப்படுத்திய மாணவியர்களின் பெயர் பட்டியல் வருமாறு : மாணவி வர்ஷிகா 14 வயதுக்குட்பட்ட 80 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் முதலிடம், நீளம் தாண்டும் போட்டியில் முதலிடம், 200 மீட்டர் ஓட்ட போட்டியில் முதலிடமும், மாணவி அஞ்சலி சில்வியா 17 வயதுக்குட்பட்ட 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்ட போட்டியில் முதலிடம், நீளம் தாண்டுதலில் முதலிடம், மும்முறை தாண்டும் போட்டியில் முதலிடமும், அதேபோல் மாணவி ஜெயரோஸ் 19 வயதுக்குட்பட்ட 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்ட போட்டியில் முதலிடம், நீளம் தாண்டும் போட்டியில் முதலிடம், மும்முறை தாண்டும் போட்டியில் முதலிடமும், இதே பிரிவில் மாணவி அபிநயஸ்ரீ உயரம் தாண்டும் போட்டியில் முதலிடம், 200 மீட்டர் ஓட்ட போட்டியில் முதலிடம், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

 

மேலும், 19 வயதுக்குட்பட்ட தட்டு எறிதல் போட்டி மற்றும் ஈட்டி எறிதல் போட்டியில் மாணவி நிகேதா முதலிடமும், மாணவி நஜர் நிஷா 2 ம் இடமும், உயரம் தாண்டுதல் போட்டியில் மாணவி அமிர்தவள்ளி 2 ம் இடமும், குண்டு எறிதல் போட்டியில் மாணவி மார்கிரேட் டோரா 2 ம் இடமும், மாணவி நிகேதா 3 ம் இடமும், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்போட்டியில் மாணவி ஹர்ஷினி 2 ம் இடமும், மாணவி சுடியக்கா 100 மீட்டர் ஓட்ட போட்டியில் 2 ம் இடமும், 200 மீட்டர் ஓட்ட போட்டியில் 3 ம் இடமும், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்போட்டியில் மாணவி சைமாக்காதூன் 3 ம் இடமும் பெற்றுள்ளனர்.

 

17 வயதுக்குட்பட்ட 1500 மீட்டர் ஓட்ட போட்டியில் மாணவி பிருந்தா ஸ்ரீ 2 ம் இடமும், 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் மாணவி வர்ஷிதா முதலிடமும், மாணவி மதுமிதா 3 ம் இடமும், நீளம் தாண்டும் போட்டியில் மாணவி வர்ஷிதா 2 ம் இடமும், உயரம் தாண்டுதல் போட்டியில் மாணவி யாழினி முதலிடமும், குண்டு எறிதல் போட்டியில் மாணவி ராகவர்த்தினி முதலிடமும், ஈட்டி எறிதல் போட்டியில் மாணவி ராகவர்த்தினி முதலிடமும், கனிஷியா இரண்டாம் இடமும், தட்டு எறிதல்போட்டி மாணவி கனிஷியா 3 ம் இடமும், மும்முறை தாண்டும் போட்டியில் மாணவி ரிபானா 2 ம் இடமும் பெற்றுள்ளனர்.

 

14 வயதுக்குட்பட்ட நீளம் தாண்டுதல் போட்டியில் மாணவி ஷாரு்ஹாசினி 2 ம் இடமும், குண்டு எறிதல் போட்டியில் மாணவி பிரதிக்சனா – 3 ம் இடமும், 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் மாணவி சாருஹாசினி 2 ம் இடமும், அதேபோல், 14 வயதுக்குட்பட்ட 4 x 100 தொடர் ஓட்டப் போட்டியில் முதலிடமும், 17 வயதுக்குட்பட்ட 4 x 100 தொடர் ஓட்டப் போட்டியில் முதலிடமும், 19 வயதுக்குட்பட்ட 4 x 100 தொடர் ஓட்டப் போட்டியில் முதலிடமும் பெற்றுள்ளனர்.

 

அதேபோல் ஜெய்வாபாய் பள்ளி மாணவிகள் குழுப்போட்டியிலும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். கபாடி போட்டியில் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவு என மூன்றிலும் முதலிடமும், கோ-கோ போட்டியில் 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவு என இரண்டிலும் முதலிடமும், 19-வயதுக்குட்பட்ட கையுந்து பந்து போட்டியில் முதலிடமும், 14-வயதுக்குட்பட்ட கூடைப்பந்து போட்டியில் முதலிடமும்,
14-வயதுக்குட்பட்டஇறகு பந்து இரட்டையர் பிரிவில் முதலிடமும், ஒற்றையர் போட்டியில் 2 ம் இடமும் பெற்றுள்ளனர்.

 

அதேபோல், 17 மற்றும் 19-வயதுக்குட்பட்ட ஹாக்கி போட்டியில் 2 ம் இடமும், 17- வயதுக்குட்பட்ட கால்பந்து போட்டியில் 2 ம் இடமும், 17, மற்றும் 19-வயது க்குட்பட்ட கைப்பந்து போட்டியில் 2 ம் இடமும், பூப்பந்து போட்டியில் 19-வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடமும், 17-வயதுக்குட்பட்டோர் பிரிவில் 2 ம் இடமும், 19-வயதுக்குட்பட் பட்டோர் இறகுப்பந்து இரட்டையர் பிரிவில் 2 ம் இடமும், 14-வயதுக்குட்பட்ட கேரம் இரட்டையர் பிரிவில் முதலிடமும், 17-வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவில் 2 ம் இடமும், 14-வயதுக்குட்பட்ட எறிபந்து போட்டியில் 2 ம் இடமும், 19-வயதுக்குட்பட்ட மேசைப்பந்து இரட்டையர் பிரிவில் 2 ம் இடமும் பெற்றுள்ளனர்.

 

தடகளம் மற்றும் குழுப்போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெட்ரா ஜெயவாபாய் மாதிரி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி, உடற்கல்வி இயக்குனர் முருகேஸ்வரி, உடற்கல்வி ஆசிரியைகள் லாவண்யா, மோகனசுந்தரி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவிகள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மகேஸ்வரி, துணைத் தலைவர் ரத்னா மற்றும் சத்யவதி, சஃபியுல்லா,முத்தமிழ்செல்வன் உள்பட அனைத்து உறுப்பினர்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.